Monday, January 21, 2008

En Peyar Raamaseshan -- Book Review

ஒற்றை வார்த்தையில், லோக்கல் பாஷையில் இந்த புத்தகத்தைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், அந்த ஒரு வார்த்தை: நெத்தியடி. முதல் பக்கத்திலேயே சிக்ஸர் அடித்து கவனத்தை கவரும் எழுத்தாளர் ஆதவன், Virendar Sehwag போல 40 ரன்னில் அவுட்டாகாமல், ஆவேசமின்றி ஆசுவாசமாய் 200 அடிக்கிறார். ஒவ்வொரு பக்கத்திலும் "சபாஷ்!" சொல்ல வைக்கும் வகையில் உள்ளது இந்த நாவல் என்று கூறினால் அது மிகையாகாது.

மனிதர்களும், அவர்களின் பல வேஷங்களும் முகமூடிகளும் தான் இந்த கதையின் கரு. மனிதர்களின் பல திரைகளை கிழித்தெறிந்து, அவர்களை நிர்மூலமாக்கி, நிர்வாணமாக்கி, மேடையில் ஏற்றி நமது hypocrisy மீது spotlight அடித்து காண்பிக்கிறார் ஆதவன். 1980ஆம் ஆண்டு எழுதப்பட்டிருந்தாலும், இன்றைக்கும் புதிதாய், நடைமுறை நிகழ்வுகளுக்கு பிரதிபலிப்பாய் உள்ளது தான் இந்த நாவலின் சிறப்பாம்சம்.

ராமசேஷன் என்னும் கதாபாத்திரம் சொல்லும் தன் சுயசரிதை என்று மேலோட்டமாக சொன்னாலும், இது சுயசரிதை என்பதை விட ஒரு சுயவிசாரணை என்பதே சரியாக பொருந்தும். ராமசேஷன் தன் இன்ஜினியரிங் படிப்பை தொடங்கும் காலத்தில் தொடங்கும் கதை, அவன் படிப்பை முடிக்கும் போது நிறைவடைகிறது. தான் சமூகம் ஆட்டிவைக்கும் பொம்மலாட்ட பொம்மையாகி விடக்கூடாது என்னும் ஓட்டத்தில் கலந்து கொண்டு, அவ்வோடத்தினாலேயே அந்த சமூகத்தின் கைப்பாவையாகிறான். In trying hard not to be a product of the society, unknowingly, he becomes a product of the society.

7 (அல்லது) 8 முக்கிய கதாபாத்திரங்கள் மட்டுமே கொண்டு 200 பக்க நாவலை மிக அழகாக நிரப்பியுள்ளார் ஆதவன் அவர்கள். ஒவ்வொரு கதாபாத்திரமும் நம் ஒவ்வொருவரின் ஒரு வேஷம் போல் symbolically அமைத்துள்ளார். புகழ் விரும்பும் ஒருவர், புகழினால் கர்வம் கொள்ளாத ஒருவர், புகழ் அடைந்த மற்றவர் மேல் தன் காழ்புணர்ச்சியை எறியும் ஒருவர், மரபுகளை எதிர்க்க தைரியம் இல்லாத ஒருவர் என சராசரி மனிதர்களின் பல பிம்பங்களை கட்ட அவிழ்த்து விடுகிறார். கதாபாத்திரங்கள் அரைகுறையாக இல்லாமல், நன்கு செதுக்கப்பட்ட சிலை போல் இருப்பது கதைக்கு மேலும் மெருகூட்டுகின்றது.

Bottom Line: நான் இதுவரை படித்த மிக சிறந்த புத்தகங்களில் இதுவும் ஒன்று. நிச்சயமாக தமிழ் தெரிந்த அனைவரும் படித்து மகிழ வேண்டிய புத்தகம்.

மனதில் நின்றது: நாம் நம்ப விரும்புவதைத்தான் நம்புகிறோமே தவிர, நம்ப வேண்டியதை அல்ல.

(தமிழில் நான் பதிக்கும் மின்குறிப்புகள் சுத்த தமிழில் தான் இருக்க வேண்டும் என்கிற வரைமுறை நானாக போட்டுக் கொண்ட விலங்கு என்பதை எனக்கு உணர வைத்த ஆதவன் அவர்களுக்கு என் "Thanks")

7 comments:

Karthik said...

i like the last three lines of ur review..:)

Howard Roark said...

Thanks Karthik. I was breaking my brains to come up with 'Pure' tamil sentences. Then, after reading the book where Aadhavan has used english words (And to good use as well), I realized my folly.

Thanks for dropping by.

Cheers,
Nagesh.

Barath said...

Though I could not read the review (due to font issue in my Mozilla) I still loved this book. My friend Prasanna(kuraikudam.blogspot.com) has been suggesting to read this since 2 years and finally had a chance to read it few months back. Duly recommended to Mathi. Pirrrrrri writing, though Mathi would'nt agree on the "literature value" as I may call...Middle class manasaatchi ya thavidu podi aakkiruppaaru aadhavan. Anxious to read his other book as well..Did not strike me to share book list with you. Let us communicate more, I am also reading not like you or Mathi, still whatever I can...

Howard Roark said...

Barath,
I just loved this book. One of the best I have read till now. And as U said, Mathi did not agree on the literature value :-)

Let us keep sharing the information that we get on the books that we liked.

Cheers,
Nagesh

mathi said...

I wouldn't say that this book has no literature value at all.I would just humbly contest if someone treats this as very serious literature.

mansam said...

I have read this line somewhere `We dont see things as they are but as we are'

Howard Roark said...

Mansam,
This book also was talking about the same thing albeit in a different way.